அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.