தண்ணீர் செல்ல தடை

Update: 2022-08-01 13:35 GMT

கரூர் மாவட்டம், பாலத்துறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. புகழூர் வாய்க்கால் தேசிய நெடுஞ்சாலை அடியில் பாலத்தின் வழியாக செல்கிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான ஆகாய தாமரைகள் வந்து பாலத்தில் தேங்கி நிற்பதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்