டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் தேவாலயம் வீதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அங்குள்ள மேல்நிலைகுடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குழாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் இந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். உடனே குழாய் அமைத்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.