திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா கூந்தலூர் ஊராட்சி முதலியார் தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை தாங்கிபிடித்துள்ள தூண்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் தொட்டி வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?