சென்னை கே.கே. நகரில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ராணி அண்ணா நகர் பகுதி 1744 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதியில் குடிநீர் வாரியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் குடிநீர் வினியோகம் மிக குறைந்த அளவிலேயே கிடைக்கிறது, ஒரு சில இடங்களில் நீண்ட காலமாக குடிநீர் வருவதே இல்லை. லாரிகள் மூலம் கிடைக்கப்பெறும் குடிநீரும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. எனவே இந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறையை முழுவதுமாக தீர்த்து வைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?