மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் கடைவீதியில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பில்லாததால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக சாலையோர பகுதி சேறும்,சகதியுமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?