மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வ.உ.சி. வடக்கு தெருவில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. இதனால் குடிநீர் குழாயை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் குடிநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?