திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில், மண்ணில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.