தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் தண்ணீர் தேவை மற்றும் கோவிலை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோவில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு பழுதடைந்து விட்டது. இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கந்தசாமி, குமாரசாமிபேட்டை, தர்மபுரி.