தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அண்ணாமலைஅள்ளி ஊராட்சி புதூரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்தபகுதி பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஏ.பி.வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.