சுத்தம் செய்யப்படாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-07-30 13:05 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழன்குறிச்சி புதுத்தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் இந்த தொட்டியின் மேல் செடி கொடிகள் ஏறி தண்ணீரில் கலப்பதால் குடிநீர் அசுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தண்ணீரில் சுண்ணாம்பு துகள்கள் கலந்தது போன்று வருகிறது. இதனால் தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்