சென்னை மாதவரம் புத்தகரம் இந்திரா நகர் 4-வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 10 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மேலும் குடிநீர் எடுப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழல் உள்ளது. எனவே பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.