பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டி

Update: 2022-07-29 06:54 GMT

சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை அருகில் தண்ணீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அதனை முறையாக பராமரிக்காமல் நகராட்சி கிடப்பில் போட்டு விட்டது. இதனால் அந்த இடம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி இன்று, இருக்கும் இடம் தெரியாமல் சுவரொட்டிகளால் மறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் சிதம்பரம் நகராட்சி கமிஷனர் இந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்