குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

Update: 2022-07-28 13:56 GMT

சேலம் பெரமனூர் காமராஜர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் திருட்டு போனது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கன் வாடி குழந்தைகளுக்கு அதன் அருகில் சுடுகாட்டில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே பழுதான தொட்டியை அகற்றி விட்டு புதிதாக  குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என அந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

-ஏழுமலை, காமராஜர் காலனி, சேலம்.

மேலும் செய்திகள்