கோபி அருகே மேவாணி கிராமம் தபால் நிலைய தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு கண்ணனூரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கடந்த பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். உடனே குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.