நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் மாடிகடை பஸ் நிறுத்தம் அருகில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உள்ளது. இந்த குழாயின் மூலம் அந்த பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய் உடைந்து, கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் கழிவுநீர் போல் தேங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.