நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கலங்காணியில் இருந்து கண்ணூர்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ரெயில்வே அதிகாரிகள் எடுக்க வேண்டும்.