நசியனூர் சாமிகவுண்டன்பாளையம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் அதிகமாக வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடும் போது தண்ணீரில் வழுக்கி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதையும், விபத்துகள் நடப்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.FF