தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து அபாயம்

Update: 2022-07-25 18:46 GMT

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி எதிரே பொது குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த குழாயில் இருந்து பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். அதில் இருந்து வீணாகி வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள வாய்க்காலில் வடியாமல், சாலையிலேயே தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்குவதால் பாசி படர்ந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தண்ணீரை வடிகாலில் மாற்றி விட வேண்டும்.

மேலும் செய்திகள்