தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கவுனூரில் குடிநீர்தொட்டி அமைந்துள்ளது. தற்போது அந்த குடிநீா் தொட்டியின் தடுப்பு சுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டி அருகே குடம் வைத்து பிடிக்க வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடைந்த குடிநீர் தொட்டியின் சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-சுரேஷ், கவுனூர், மாரண்டஅள்ளி.