சேலம் மேற்கு சித்தர் கோவில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் வழுக்கி விழும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடனே செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை விரைவில் சரி செய்யாதால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-தேசிங்குராஜ், சேலம்.