தண்ணீர் இல்லாத தொட்டி

Update: 2023-08-20 17:47 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சியில் கோவிலூர் கிராமத்தில் குந்தியம்மன் கோவில் வளாகத்தில் 1,500 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த குடிநீர் தொட்டியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதியான குடிநீர், பொதுகழிப்பிட வசதி இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாபு, பாலக்கோடு.

மேலும் செய்திகள்