சிதம்பரம் தாலுகா கிள்ளை பேரூராட்சி 11-வது வார்டு காமன் கோவில் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையம் கடந்த 10 மாதமாக செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனை பேரூராட்சி மன்ற நிர்வாகம் சரி செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும்.