சேலம்-ஏற்காடு சாலையில் கோரிமேடு பகுதியிலிருந்து சட்டக்கல்லூரி வரை உள்ள சாலையை விரிவாக்கி, சாக்கடை கால்வாய் அமைத்துள்ளனர். ஆனால் முறையாக மழை நீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையில் மழை வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மஹமூத், சேலம்.