தர்மபுரி மாவட்டம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. தற்போத இந்த தண்ணீர் தொட்டி சேதமடைந்து சிமெண்டு பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக தினமும் நீண்ட தூரம் அலைய வேண்டி உள்ளது. இதேபோல் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம், பகுதிகளிலும் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனிவேல், தர்மபுரி.