ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-13 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் பல ஆண்டுகளாக உடைந்து சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் தொட்டியின் கீழ் குப்பை கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து தண்ணீர் வினியோகம் செய்வதுடன், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்