வீணாகும் குடிநீர்

Update: 2023-08-09 17:38 GMT

சேலம் நகரம் அஸ்தம்பட்டியில் ராமகிருஷ்ணா சாலை, காந்தி ரோடு இணையுமிடத்தில் உள்ள சைக்கிள் கடை அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-புளியப்பன், சேலம்.

மேலும் செய்திகள்