கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் சாலையும் சேதம் அடைந்து உள்ளது. அதை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். ஆனால் பணியை இதுவரை முடிக்கவில்லை. இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. மேலும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணியால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விரைவாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.