காஞ்சீபுரம், குன்றத்தூர் மாணிக்க நகரில் மழைநீர் கால்வாய் பணி தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் வேலை முடிக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது மற்றும் கொசுக்கள் அதிகளவில் உருவாகியுள்ளது. அருகில் 2 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மழை பொழியும் காலம் வரும்முன் உரிய அதிகாரிகள் மழைநீர் கால்வாய் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.