தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரெட்டியூர் சுடுகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்்தேக்க தொட்டி சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, பாலக்கோடு, தர்மபுரி.