வீணாகும் குடிநீர்

Update: 2023-07-09 17:06 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4 ரோடு பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்