கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பூவனூர் ஊராட்சியில் உள்ள கீரனூரில் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.