ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நெய்மாணிக்கம் வடக்கு யாதவர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இ்ங்கு குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. 2 ஆழ்துளை கிணறுகள் இருந்தும் தண்ணீர் கிடையாது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீருக்காக பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று வருகிறார்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.