சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள கிழக்கு தெரு, மேற்கு தெருவில் உள்ள மினி குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீா் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.