நாகை கோர்ட் வடக்கு தெருவில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியாகிறது. இதனால் அந்த சாலையில் குடிநீர் ஆறு போல ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகை.