தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டில் குடிநீர் தொட்டி சுமார் 2 ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கோவிந்தன், மாரண்டஅள்ளி.