தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 3-வது வார்டில் டாக்டர் பாஷா தெருவில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இங்கு ஏற்கனவே இருந்த அடிபம்பை அகற்றிவிட்டனர். இங்கு மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்கராயன், அரூர், தர்மபுரி.