சரிசெய்ய வேண்டிய குடிநீர் குழாய்

Update: 2023-06-04 17:20 GMT

சேலம் பெரமனூரில் அவுசிங் போர்டு உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கபட்டது. சாக்கடை கால்வாய் பணிக்காக சாலையில் குழி தோண்டப்பட்டதில் குடிநீர் குழாயின் இணைப்பு பாதியாக துண்டிக்கப்பட்டது. சாக்கடை கால்வாய் பணியும் தற்போது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் குடிநீர் வரும்போது துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாமல் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும்.

-காளிதாஸ், சேலம்.

மேலும் செய்திகள்