ஆக்கிரமிக்கப்பட்ட ராஜ்கால்வாய்

Update: 2023-05-31 16:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி மேல்கோட்டாய் ஏரியின் உபரிநீர் ராஜ்கால்வாய் உற்பத்தியாகி காந்திநகர், இந்திரா நகர், பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக போலீஸ் நிலையம் அருகே சாலையை கடந்து ஜெகதேவிரோடு வழியாக பாம்பாற்றில் கலக்கிறது. இந்த கால்வாய் பகுதிகளை பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, பர்கூர்.

மேலும் செய்திகள்