சேலம் பழைய சூரமங்கலம் 21-வது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சில மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனசேகர் , பழைய சூரமங்கலம் ,சேலம்-5.