தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சியில் ரெட்டியூர், வி.செட்டிஏரிபள்ளம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த பகுதி புதர்மண்டி காட்சியளிக்கிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-சதீஷ், பாலக்கோடு, தர்மபுரி.