கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மோட்டார் மூலம் தினசரி குடிநீர் ஏற்றப்படுகிறது. ஆனால் மோட்டார் ஆன் செய்ததை மறந்துவிட்டு, தொட்டி நிரம்பி வழிவது கூட தெரியாமல் நீண்ட நேரம் கழித்து ஆப் செய்கின்றனர். இதனால் குடிநீர் வீணாகி, நீர்த்தேக்க தொட்டியை சுற்றி தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?