குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-05-14 16:29 GMT
தொழுதூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 40 கிராமங்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக வாரத்திற்கு 2 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் தினசரி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்