பழுதடைந்த ஆழ்துளை குழாய்

Update: 2023-05-10 17:34 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜெர்தலாவ் ஊராட்சியில் உள்ள செங்கோடப்பட்டி பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை குழாய் பழுதாகி நீண்ட நாட்களாக பயன்பாடின்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே பழுதடைந்த ஆழ்துளை குழாய் மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்