கடலூர் மஞ்சக்குப்பம் மிஷன்தெரு பகுதியில் குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழாய் உடைந்ததால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்பிரச்சினை ஏற்பட்டு, பல தினங்கள் ஆகியும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடைந்த குழாயை உடனே சீரமைத்து, அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.