தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 6-வது வார்டில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.