மங்களூர் ஒன்றியத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொழுதூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் தினசரி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.