குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-04-19 16:09 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் சாலையின் கீழ் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழாயில் சாலையின் நடுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையின் மேல் பகுதியில் கொப்பளித்து வெளியேறுகிறது. சுமார் ஒரு மாத காலமாக அந்த இடத்தில் வெளியேறி கொண்டிருக்கும் தண்ணீரால் சாலையில் சேதம் ஏற்படுகிறது. அந்த சாலையில் அதிக அளவு கனரக வாகனங்கள் செல்வதால் சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்வதோடு சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் குழாயை சாலையின் ஓரத்திற்கு மாற்றி தரமாக அமைக்கப்பட்டுள்ள சாலை வீணாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக அளவு விரயமாகி கொண்டிருக்கும் குடிநீரை விரைவாகாமல் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்