கம்மாபுரம் ஒன்றியம் பெருந்துறை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக தொட்டி கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.