நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி மேல வீதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. .இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் கிடைக்காமல் போகும் அவல நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை